அவிநாசி, மே 10- அவினாசியில் திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகு தியில் ஆளும் கட்சி துணையோடு முறைகேடாக வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்குவதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி பாலசுப்பிர மணியம் கூறியதாவது, திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், இப்பகுதியில் ஆளும் கட்சியான அதிமுகவினர் முறைகேடாக வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கி வந்துள்ளனர். இதுகுறித்து கடந்த இரு மாதங் களுக்கு முன்பு பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனிடம் மனு அளித்தோம். அந்த மனுவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் இணைப்புகள் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தோம்.
இதனை ஆய்வு செய்த செயல் அலுவலர் 950 குடிநீர் இணைப்புகள் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். மேலும் இதுகுறித்து மா வட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத் தியுள்ளோம். அதோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு கிடைத்தவுடன் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப் படும் அல்லது அபராதத்துடன் குடி நீர் இணைப்புக்கான தொகை கள் வசூலிக்கப்படும் என உறுதி யளித்தார். ஆனால் இதுவரை எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதற்கிடையில், கடந்த மாதம் ராக்கியாபாளையம் பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப் புகள் அமைக்கப்பட்டது. இது குறித் தும் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று அம் மாபாளையம் ராம்நகர் பூங்கா அரு கில் ஆளும் கட்சி அதிமுக பிரமுகர் துணையுடன், முறைகேடாக குடிநீர் இணைப்புகள் அமைக்கும் முயற்சி நடைபெற்றது. அதற்காக ராம்நகர் பிரதான தார்சாலையின் குறுக்கே குழாய் புதைக்கும் பணி நடைபெற் றது. இதுகுறித்துத் தகவல் தெரி விக்கப்பட்டதும், பேரூராட்சிப் பணி யாளர்கள் முறைகேடாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியைக் கை விட்டனர். எனவே தொடர்ந்து திரு முருகன்பூண்டி பேரூராட்சியில் முறைகேடாக குடிநீர் குழாய் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.