tamilnadu

மனித நேய வார விழா

 

திருப்பூர், பிப். 2- திருப்பூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் மனித நேய வார விழா அண்மையில் கொண் டாடப்பட்டது. இதன் நிறைவு விழா திருப்பூர்- பல்லடம் சாலையிலுள்ள எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தலைமையில் நடை பெற்றது. திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் முன்னலை வகித்தார்.  இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், திருப்பூர் மாவட்ட ஆதி  திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் சார் பில் மனித நேய வார விழா (ஜன.24-30) சிறப்பான முறை யில் நடைபெற்றது. ஆதி திராவிடர், பழங்குடியினர் வளர்ச்சி மற்றும் முன்னேற் றத்திற்காக தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இத்துறையின் சார்பில், மாணவ, மாணவியர்களின் நலனுக்காக, பல்வேறு வகை யான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வகையான போட்டித்தேர்வுகளிலும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வில் வளம் பெற வேண் டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக் கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசு கள் வழங்கப்பட்டன.

;