அவிநாசி, நவ.16- அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடை பெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு 450 மூட்டை நிலக்கடலைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.4,800 முதல் ரூ.4,910 வரையிலும், இரண்டாவது ரக நிலக்க டலை ரூ.4,650 முதல் ரூ.4,730 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.4,580 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.