tamilnadu

img

தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்கிடுக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 26 - தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்பாகவே திருப்பூ ரில் உள்ள அனைத்து தொழிலாளர் களுக்கும் போனஸ் வழங்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு பனி யன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஐந்து மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் பனியன் தொழிலா ளர்களுக்கு கொரோனா தொற்று முடக்கக் காலத்தைக் காரணம் காட்டி போனஸ் தருவதை மறுக்கக் கூடாது. கடந்த ஆண்டுக்கான போனஸ் என்பதால் அதை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்க ளில் முழக்கம் எழுப்பப்பட்டன. முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளியங்காடு நால் ரோடு, லட்சுமி நகர், பெரு மாநல்லூர், வேலம்பாளையம் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் ஆகிய ஐந்து மையங்களில் இந்த ஆர்ப்பாட்டங் கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சிஐ டியு சங்கத் தொழிலாளர்கள் பங் கேற்று போனஸ் உரிமையை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சிஐ டியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, பி.பாலன் உள் பட ஏரியா நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியு றுத்திப் பேசினர்.