tamilnadu

img

திருப்பூரில் முதல் கொரோனா பலி ஆம்புலன்ஸ் உதவியாளர் உயிரிழந்தார்

திருப்பூர், ஜூன் 24 - திருப்பூர் அவிநாசிபாளை யத்தை சேர்ந்த 108 அவசர ஊர்தி உதவியாளராக இருந்த வாலிபர் கடந்த 18ஆம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனில்லாமல் புதனன்று காலை பரிதாபமாக உயிரி ழந்தார். திருப்பூர் மங்கலம் பகுதி யில் தங்கியிருந்து அவசர ஊர்தி உதவியாளராக வேலைசெய்து வந்தவர் கணேஷ் (வயது 22). இவர் கடந்த 15ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று திரும்பினார். திருப்பூருக்கு வந்த பின்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், அவர் கடந்த 18ஆம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேஷ் சிகிச்சை பலனில்லாமல் புதனன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 123 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் கணேஷின் உயிரிழப்பு திருப்பூர் மாவட்டத்தின் முதலா வது கொரோனா பலியாகும்.

;