tamilnadu

img

சிப்காட் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு : அவிநாசி சட்ட மன்ற அலுவலகம்  முற்றுகை

சிப்காட் தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவிநாசி அருகே புலிப்பார், தத்தனூர், புஞ்சைதாமரைக் குளம், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சுமார் 850 ஏக்கருக்கு மேலாக விவசாய நிலத்தை பறித்து சிப்காட் தொழிற்சாலை அமைக்க நேற்று (செவ்வாய்க்கிழமை) வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தத்தனூர் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட சிப்காட் அமைக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, இன்று (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்ருந்த நிலையில், அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

;