tamilnadu

தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்ததா? திருப்பூரில் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

திருப்பூர், ஜூன் 20- திருப்பூரில் உள்ள சில தனியார் பள்ளி கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத் துவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தனி யார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செட்டி பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாண வர்களுக்கு மதிப்பெண் அதிகம் வழங்கு வதற்காக அரையாண்டு, காலாண்டு தேர் வுகளின் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுதப் பட்ட விடைத்தாள்கள் பெறப்பட்டு வந்த தாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பள்ளி களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

இந்த ஆய்விற்கு பின் அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது, விடைத் தாள்கள் பெறப்பட்டதாக எழுந்த புகா ரின்பேரில் ஆய்வு  மேற்கொண்டு   மாண வர்களின் முந்தைய காலாண்டு, அரை யாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் களை எடுத்துச் செல்வதாகவும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கவும் பள்ளிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறை கேடு எதுவும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  மேலும், பத்தாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத, தேர்ச்சி யடையாத மாணவர்களும் தேர்ச்சி என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப் பதால் எந்த பள்ளியிலும் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரி வித்தார்.

;