கோவை, ஜூன் 4 – கல்விக் கட்டணம் கேட்டு பெற் றோர்களை நிர்பந்திக்கும் தனி யார் பள்ளிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் மற் றும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் எதி ரொலியாக, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பணி கள் தவிர மற்ற பணிகளுக்கு கட் டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் உள்பட லட்சக் கணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, பணிப் பாதுகாப்பின்மை, சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கையே தலை கீழாக மாறியுள்ளது. இந்நிலை யில் தனியார் பள்ளிகளில் மாண வர்கள் சேர்க்கைக்கு கல்விக் கட்ட ணம் செலுத்தும்படி பெற்றோர்க ளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் பட்டு வருகிறது. இது மக்களி டம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் அதேசமயம் பிள்ளை கள் படிப்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற அச்சமும் ஏற்பட் டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வரப்பெற் றன. குறிப்பாக, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரி களை சந்தித்து புகார் மனுக்களை அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு பேரிடர் மேலாணமை சட்டம் 2005-ன்படி பொது முடக்கம் அம லில் உள்ள நிலையில் அனைத்து வகை தனியார் பள்ளிகள் பெற் றோர்களிடம் எந்தவொரு கட்ட ணங்களையும் செலுத்த வற்புறுத் தவோ, கட்டாயபடுத்தவோ கூடாது என ஆணையிட்டுள்ளது. இதனை மீறி தனியார் கல்வி நிறு வனங்கள் கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்துவது என புகார்கள் வந்தால் உரிய பள்ளி நிறு வனங்கள் மீது சட்டபடியான நட வடிக்கை பாயும் என எச்சரித்துள் ளார்.
இதேபோல், திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள் ளார். அவர் கூறுகையில், பெற் றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு நிர்பந்திக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக் கும் சுற்றறிக்கை அனுப்பப்பட் டது. திருப்பூரில் உள்ள சில தனி யார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக் கட்டண நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற் கான கட்டணத்தையும் செலுத்து மாறு பெற்றோர்களுக்கு குறுஞ் செய்தி மூலமாக வற்புறுத்துவ தாக புகார்கள் எழுந்துள்ளது. தற் போதைய சூழ்நிலையில் கல்விக் கட்டணம் கட்ட பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக் கும் அறிவுறுத்தி உள்ளோம். இதை மீறி கல்விக் கட்டணம் கட்ட நிர்பந்திக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்தால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் எச்சரிர் தார்.