tamilnadu

அவிநாசியில் பருத்தி ஏலம் லட்சத்தைத் தொட்டது

அவிநாசி, ஜூலை 9- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட் டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்திற்கு சுமார் 1,914 பருத்தி மூடை கள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.3,500 முதல் ரூ.4,250 வரையிலும்,  மட்டரக பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 1,000 முதல் ரூ.1,800 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.21.87 லட்சம் ஆகும்.

;