tamilnadu

img

குடிமராமத்துப் பணி: கூலிக்கு ஜிஎஸ்டி வரியா? வரி விலக்களிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 17 - திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், குடிமரா மத்து திட்டம் பணி முன்னேற்றம்  தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயி களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், பொதுப்பணித்துறை கூடுதல் செய லாளர் எம்.பாலாஜி தலைமையில் புதனன்று நடைபெற்றது. 2019-20 ஆம் ஆண்டிற்கு குடி மராமத்து திட்டத்தின்கீழ் தமிழ கத்தில் 1829 பணிகள் ரூ.499.68  கோடி மதிப்பீட்டில் மேற்கொள் ளப்படுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் ஆழியாறு வடிநிலக் கோட்டத்தில் 53 பணிகள் ரூ.6 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம், திருமூர்த்திக் கோட்டத்தில் 54 பணிகள் ரூ.4 கோடியே 43 லட்சத்து  40 ஆயிரம், பவானி வடிநிலக் கோட்டத்தில் 5 பணிகள் ரூ.86 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் அம ராவதி வடிநிலக் கோட்டத்தில் 22 பணிகள் ரூ.3 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் என மொத்தம் 134 பணிகள் ரூ.15கோடியில் செயல் படுத்த, நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இப்பணிகளை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் 2ஆவது வாரத்தில் செய்து முடிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன் னேற்றம் மற்றும் இப்பணிகள் தொடர்பான விவசாயிகளின் கருத்துகள் இக்கூட்டத்தில் கேட் டறியப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், பாலதண்டபாணி ஆகி யோர் பங்கேற்று பேசினர். அப் போது கூறுகையில், மூன்றாவது ஆண்டாக செயல்படுத்தப்படும் இத் திட்டம் வரவேற்கத்தக்கது.

காக்க வைக்கப்பட்ட விவசாயிகள்
 
திருப்பூர் மாவட்டத்தில் விவசாய குடிமராமத்துப் பணிகள் தொடர்பான கலந்தாய்விற்காக பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர் எம்.பாலாஜி பங்கேற்கும் கூட்டம் புதனன்று காலை 10 மணிக்கு நடைபெறும், இதில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்டம் முழுவதும் பாசன சபை,  நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு, விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி விவசாயிகள் மாவட்ட  ஆட்சியரகத்திற்கு வந்தனர். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் அந்த கூட்டம் தொடங்கப்படாமல் தாமதம் ஆனது. இது தொடர் பாக பதில் சொல்லக்கூட வேளாண் துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள்  யாரும் இல்லை. ஒரு வழியாக 12.15 மணிக்கு மேல் கூட்டம் தொடங்கி நடை பெற்றது. அதன் பிறகு வந்த அதிகாரிகள் யாரும் தாமதம் குறித்து விளக்கம் அளிக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. ஆனால் விவசாயிகளை சுருக்கமாகப் பேசி முடிக்கும்படி அவசரப்படுத்தி, கூட்டத்தை நடத்தி முடித் தனர்.

ஆனால் இத்திட்டப் பணியில் கூலியாக கொடுக்கும் தொகைக்கும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்ய வேண்டும் என்பது  சரியல்ல, எனவே மனித உழைப்புக்கு ஜிஎஸ்டி வரி என்பதை விலக்களிக்க வேண்டும். மேலும் அரசு ஒதுக்கீட்டுப் பணம்  மற்றும் விவசாயிகள் பங்களிப்புத் தொகை சேர்த்து வேலை செய்யும் போது ஜிஎஸ்டி வரி பிடித்தம் என  சில லட்சங்கள் போய்விடும். ஆனால் பணியின் திட்ட மதிப் பீட்டுத் தொகைக்கு வேலை செய்த தாக காட்ட வேண்டி இருக்கும். அப்போது வேலை அளவு குறை வாக இருந்தால் சந்தேகத்தை ஏற் படுத்தும் என்றனர். இதற்கு பதில் கூறிய கூடுதல் செயலாளர் எம்.பாலாஜி, ஜிஎஸ்டி தொகையைக் கணக்கிட்டுத்தான் திட்டத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும் மனித உழைப்புக்கு வழங்கும் கூலிக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது பற்றி  மாநில அரசு மத்திய அரசின் ஜிஎஸ்டி தொடர்பான அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர்கள், குடிமரா மத்துப் பணியில் 75 சதவிகிதத்திற்கு மேல் மனித உழைப்பாக பயன் படுத்தப்பட்டால் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும், மனித உழைப்பு 75 சதவிகிதத்திற்கு குறைவாக பயன்படுத்தப்பட்டு இதர பொருட்கள், கருவிகள் பயன் படுத்தப்பட்டால் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனக் கூறி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் மனித உழைப்புக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பதை முழுமையாக விலக்களிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள் வலியுறுத் தினர்.

அத்துடன் செப்டம்பர் 2ஆவது  வாரத்துக்குள் குடிமராமத்துப் பணி களை முடிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போதே கால்வாய் களைத் தூர்வாரி வைத்தால் மழைக்  காலத்திற்குள் மீண்டும் அவற்றை தூர்வார வேண்டிய நிலை ஏற்படும். எனவே கால அவகாசத்தை நீடித்து வழங்க வேண்டும் என்றனர். கால்வாய்களிலும், கால்வாய் கரைகளிலும் பல பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். பிஏபி காண்டூர்  கால்வாய் பராமரிப்பு, பாது காப்புக்கு தனிக்குழு உருவாக்கி கண்காணிக்க வேண்டும். குடிமரா மத்துப் பணியுடன், நீர்நிலை ஆதா ரங்கள் தொடர்பான இதர முக்கியப்  பணிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் பல்வேறு பாசன  சபை, நீரினைப் பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் கோரிக்கை களை வைத்தனர். குடிமராமத்துப் பணியுடன் இம் மாவட்டத்தில் பிஏபி உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் செய்ய வேண்டிய இதர பணிகள் குறித்து விவசாயிகள் கோரிக்கை மனு தயாரித்து ஆட்சியரிடமும், பொதுப் பணித்துறை செயற்பொறி யாளரிடமும் அளிக்கும்படியும், மாநில அரசு மூலம் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூடுதல் செயலாளர் பாலாஜி கூறி னார். அத்துடன் விவசாயிகள் ஜிஎஸ்டி வரி பதிவு மற்றும் கணக்குத் தாக்கல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் மூலம் தனி உதவி  மையம் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு உதவுவதாகவும், குடிமராமத்துப் பணியை 15 நாட்களுக்கு ஒரு முறை  உதவி பொறியாளர்கள் நேரில் கள ஆய்வு செய்து, விவசாயிகள் அளிக்கும் பில் தொகை விபரங் களை உடனடியாக பரிசீலித்து அதற்குரிய தொகையை விரைந்து அவர்களுக்கு வழங்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அவர் தெரிவித்தார். இது தொடர் பான புகார்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் தொடர்பு கொள்ளும்படியும் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் ஆர்.சுகுமார், தாரா புரம் சார் ஆட்சியர் பவன்குமார், உடு மலை கோட்டாட்சியர் இந்திர வள்ளி,  கண்காணிப்பு பொறி யாளர்கள் சண்முகம் (பவானி வடி நில வட்டம்), பொ.முத்துச்சாமி (ஆழியார் வடிநில வட்டம்), செயற் பொறியாளர்கள் தர்மலிங்கம் (அமராவதி வடிநில கோட்டம்), வி.தாமோதரன் (கீழ் பவானி வடி நில கோட்டம்), ராதாகிருஷ்ணன் (பவானி சாகர் வடி நில கோட்டம்), அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

;