தருமபுரி, டிச.5- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் சோளம், ராகி ஆகி யவை பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாவட் டத்தில் பெய்து வந்த தொடர் மழையால் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் நிலைகளுக்கு செல்லும் கால்வாய்களை முறை யாக பராமரிக்காததால் ஆங்காங்கே புதர் மண்டி உள்ளது. இதனால் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து தேங்கி உள்ளது. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, மழைநீரால் பாதித்துள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.