tamilnadu

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பொங்குபாளையம் குளம், குட்டைகளை இணைத்திடுக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 7 - அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட் பட்ட பொங்குபாளையம் ஊராட்சி யில் உள்ள கிராமங்களின் குளம், குட் டைகளை இணைக்கும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் கே.ரங்கசாமி தலைமையில், சங்கச் செயலாளர் எஸ்.அப்புசாமி, பொருளாளர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களுக்கு நீராதாரத்தை உருவாக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் திருப்பூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பொங்குபாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட குளம், குட்டைகள் சேர்க்கப்படவில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேற்படி ஊராட்சி குளம், குட்டை களை இத்திட்டத்தில் சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டும், இன்றுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.  பரமசிவம்பாளையம், மாரப்பம்பா ளையம் புதூர், பள்ளிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய கிராமங்களில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குட்டைகள் உள்ளன. அத்துடன் 10க்கும் மேற் பட்ட தடுப்பணைகள் உள்ளன. இவற் றுக்கு நீர் நிரப்புவதன் மூலம் விவசா யத்தை நம்பியுள்ள இந்த ஊராட்சி மக்களுக்கு நீராதாரம் கிடைக்கும். ஏற் கெனவே ஆயிரம் அடிக்குக் கீழ் நிலத் தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் குடி நீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைப்பதில்லை.

எனவே இந்த ஊராட்சியை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் உடனடியாக சேர்க்க வேண்டும். அத்துடன் வடக்குத் தொகு தியில் விடுபட்ட குட்டைகளையும் கணக்கெடுத்து இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.  மேலும் வடக்குத் தொகுதிக்கு உட் பட்ட குளம், குட்டைகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி அதன் கரைகளைப் பலப் படுத்த வேண்டும். திருப்பூர் வடக்குத் தொகுதியை சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயி கள் சுமார் 30 கிலோமீட்டர் தொலை வில் உள்ள திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் வடக்கு உழவர் சந் தைக்குத்தான் காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். திருப்பூர் நக ரில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெ ரும் பிரச்சனையாக உள்ளது.

இத னால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து இந்த உழவர் சந்தைக்கு வந்து செல்ல 4 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இந்த சிரமத்தைப் போக்க மேற்கண்ட பகுதி மக்களுக்கு பெருமாநல்லூர் மையமான பகுதியாக இருப்பதால், இங்கு உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.  மேலும், இதுகுறித்து தமிழக முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பரா யன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  விஜயகுமார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

;