tamilnadu

img

கேரள வாலிபர் சங்க நிர்வாகிகள் படுகொலை - ஆவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.3– கேரளாவில் வாலிபர் சங்க ஊழியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செ ய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலத்தின் பல  இடங்களில் வாலிபர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம், வெங் ஙாரமூடு என்ற இடத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் ஊழியர்கள் ஹக்  முகமது (24), மிதிலாஜ் (30) ஆகிய இருவரை  காங்கிரஸ் குண்டர்கள் ஞாயிறன்று வெட்டி படுகொலை செய்தனர். இக்கொடூரப் படு கொலையைக் கண்டித்து திருப்பூர் அனுப்பர் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே செவ் வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் நகரச் செயலாளர் ஹனீபா உள்பட வாலிபர் சங்கத்தினர் திரளானோர் பங் கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், கூடலூர் சளி வயல், பந்தலூர் பஜார், சேரம்பாடி  பஜார், அய்யங்கொல்லி, எருமாடு பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.சிவப்பிரகாஷ், மாவட் டக்குழு உறுப்பினர் சுதர்சன், கூடலூர் இடைக்கமிட்டி பொருளாளர் சிராஜ், நகரச்  செயலாளர்கள் ஜூனைஸ், அஸைநார், பாபு பாரிஸ், ரமேஷ் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சிவன், மாவட்டச் செயலாளர் இரா.எழில் அரசு, மாவட்டப் பொருளாளர் எம். சிலம்பு, மாவட்ட துணைத் தலைவர் வேலாயுதம், மாவட்ட துணை செய லாளர் கே.லோகநாதன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கண்டன முழக் கங்களை எழுப்பினர்.

;