உடுமலை, மார்ச் 7- உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி முதல்வர் பேராசிரியர் ச.பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர் மன்றத் தலைவர் இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியத் துறையைச் சேர்ந்த மாணவர் எஸ்.சேக் அலாவுதீன் வரவேற்றார். இவ்விழாவில், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இரா.ரவிக்குமார் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டார். முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் கந்தசாமி விளை யாட்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு மற்றும் கலை இலக்கியப் போட்டி களில் பங்கேற்று வெற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோட்டாட்சியர் பரிசு களை வழங்கினார். இவ்விழாவில் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளைப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பி.என்.ராஜேந்திரன் பங்கேற்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அறக்கட்டளை சார்பாகப் பரிசுகளை வழங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மு.மதியழகன், சு.குணசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்த னர். விளையாட்டுக்குழு மாணவர் செயலாளர் கே.இலட்சுமணன் நன்றி கூறினார்.
அவிநாசி
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்தார். தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குனர், உலக சமுதாய சங்க துணை தலைவர் பி.கே.ஆறுமுகம் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கஜேந்திரா அறக்கட்டளை நிர்வாகி இளமுருகன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் சி.குலசேக ரன், பிரசன்னகுமார், ஆர்.தாரணி ஆகியோர் நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தனர். நிறைவாக மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொறுப்பாளர் பி.ஹேமலதா மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.