tamilnadu

img

பல்லடம் தையல் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: சிஐடியு தலையீட்டில் தீர்வு காண நிர்வாகம் வாக்குறுதி

திருப்பூர், செப். 23 - பல்லடத்தில் உள்ள தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதி, முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சிஐடியு நிர்வாகிகளிடம் கூட்டு றவு சங்க அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பல்லடம் பெண்கள் எழுது பொருட்கள் உற்பத்தியாளர் மற் றும் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம் (ஐஎன்டி 1260) இங்குள்ள பட்டேல் வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 270 பேர் உறுப்பினர் களாக இருந்து வருகின்றனர். இங்குள்ள உறுப்பினர்களுக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக போனஸ் மற்றும் டிவிடண்ட் ஈவுத் தொகை வழங்கப்பட வில்லை, அங்குள்ள கணக்காளர் உறுப்பினர்களைத் தரக்குறை வாக பேசுவது, கேள்வி கேட்போ ருக்குத் துணிகளைத் தைக்கக் கொடுக்காமல் பாரபட்சமாக நடந்து கொள்வது, அரசு நிர் ணயித்த ஊதியத்தைத் தராமல் குறைத்துக் கொடுப்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில், சங்க உறுப்பி னர்களாக உள்ள பெண்கள் சுமார் 60 பேர் பல்லடம் சிஐடியு அலுவல கத்தைத் தொடர்பு கொண்டு கூட் டுறவு சங்கத்தில் நடைபெறும் அநீதிகள் குறித்து புகார் தெரி வித்தனர். இதன் அடிப்படையில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி, கோவை சிஐ டியு நிர்வாகி வேலுச்சாமி, ஆர்.பர மசிவம், ஓம்பிரகாஷ் மற்றும் திருப்பூர் மாவட்ட தையல் கலை ஞர்கள் சங்கச் செயலாளர் சி.மூர்த்தி  உள்ளிட்டோர் கூட்டு றவு சங்க அலுவலகத்திற்குச் சென்று மண்டல அலுவலர் மோகன்ராஜூடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அரசு நிர்ணயித்த கூலி யைத் தருவது, ஐந்தாண்டுகளாக தரப்படாத போனஸ், டிவிடண்ட் தொகைகளைத் தருவது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அத்து டன் உடனடியாக நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாகவும், உறுப்பினர் களைத் தரக்குறைவாகப் பேசு வதை நிறுத்துவதுடன், பார பட்சம் பார்க்காமல் அனைவருக் கும் துணி தைப்பதற்கு கொடுக் கப்படும் என்றும் நிர்வாகத் தரப் பில் உறுதியளிக்கப்பட்டது. அத்து டன் சங்கப் பொதுக்குழுவை முறையாக நடத்திடவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து சிஐடியு அலுவ லகத்தில் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் சிஐடியு சங்க  நிர்வாகிகள் எடுத்துக் கூறினர்.

;