திருநெல்வேலி, ஜூலை 14- நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடை பெற்றது. நெல்லையப்பர் கோவில் தேரோட் டம் ஞாயிறன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், எம்எல்ஏ லெட்சு மணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். நெல்லையப்பர் கோவில் தேரோட் டத்தை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாவட் டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்த னர். நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதி யில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்க ரன், துணை கமிஷனர் சரவணன் ஆகி யோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேரோ ட்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க ஏற் பாடு செய்யப்பட்டது.