tamilnadu

img

அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம்

திருநெல்வேலி:

நெல்லையில் ஜூலை 21,22,23 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 14ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் நடைபெற்றது.


பாளையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சிஐடியுபோக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார். சங்க பொது செயலாளர் எஸ்.ஜோதி வரவேற்று பேசினார் . சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிறுபான்மை நலக் குழு தலைவர் வீ.பழனி,சிஐடியு மாவட்ட முன்னாள்தலைவர் ம.ராஜாங்கம்,மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன்,சிஐடியு மாநிலச் செயலாளர்ஆர்.எஸ்.செண்பகம், மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலைராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், ரேவா பொதுச் செயலாளர் பி.முத்துகிருஷ்னன் ஆகியோர் பேசினர்.


சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வரவேற்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மெட்ரோ ,போக்குவரத்து,மின்சாரம், ரயில்வே, தரை வழி போக்குவரத்து என எந்ததுறையானாலும் அங்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் முதலில் போராடுவதில் முதன்மையானது சிஐடியு தொழிற்சங்கம் என்றும் நெல்லையில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசுபோக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 14ஆவது மாநில மாநாட்டை சிறப்பாகநடத்தி வெற்றி பெற செய்

வோம் என்றும் கூறினார்.


கூட்டத்தில் மாநாட்டிற்கான வரவேற்பு குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கவுரவ தலைவர்களாக டாக்டர் எஸ்.ராமகுரு, சிறுபான்மை நல குழு மாவட்ட தலைவர் வீ.பழனி, பேராசிரியர் பொன்ராஜ், சிஐடியு மூத்த தலைவர் ம.ராஜாங்கம், வீரவநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.கே.பழனிசாமி தலைவராக எஸ்.பெருமாள், செயலாளராக டி.காமராஜ், பொருளாளராக எஸ்.ஜோதி மற்றும் எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன் உட்பட 25 துணை தலைவர்கள், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் உட்பட 25 துணை செயலாளர்கள் மற்றும் 66 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;