tamilnadu

img

கொரோனா ஊரடங்கு: நிவாரணம் வழங்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி/தூத்துக்குடி, ஜூன் 17- மத்திய-மாநில அரசுகள் ஏழை, எளியமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு நிவாரண நிதி மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும். பெட்ரோல்-டீசல், கேஸ் அநியாய விலை உயர்வை வாபஸ் பெற்றிட வேண்டும். மின்சார கட்டண அநியாய விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய எதிர்ப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று நடைபெற்றது.
கீழப்பாவூர்
கீழப்பாவூர் ஒன்றியத்தில் ஆவூடை யானுர் கிளை சார்பாக கிளை செய லாளர் எம்.அந்தோணிசெல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர் எம். வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பி னர் முருகேசன், ஆரியமுல்லை, கிளை  உறுப்பினர்கள் ஏ.தங்கராஜ், பாளை யக்காரர் இசக்கிமுத்து பங்கேற்றனர்.
செங்கோட்டை
செங்கோட்டை தாலூகா அலுவல கம் முன்பு கட்சியின் நகரக்குழு  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  கிளைச்செயலாளர் ஆர்.முருகன் தலை மை வகித்தார். இடைக்கமிட்டி உறுப்பி னர் கசமுத்து முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் துவக்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் தம்பிதுரை நிறைவுரை ஆற்றினார். இதனைதொடர்ந்து செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளி அருகில் சிஐடியு வட்டாரத் தலைவர் மாரி யப்பன் தலைமையிலும், கீழபஜாரில் கட்டுமான சங்க வட்டாரச் செயலாளர் கச முத்து தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஒன்றியம் ஜோதிபாசு நகரில் கிளைச் செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் கே.சங்கரன், தாளமுத்து நகர் கிளைச் செயலாளர் எஸ்.ஐயப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.பெருமாள்தங்கராஜ் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
கொரோனா கால நிவாரணம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடை பெ‌ற்றது. ஒன்றியச் செயலாளர் முத்து  தலைமை வகித்தார். மாவட்டக் குழு  உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டி, சந்திரசேகர், பொன்கல்யாணசுந்தரம், கணேசன், தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
வீரவநல்லூர்
சேரை ஒன்றியம் வீரவநல்லூரில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெங்கட்ராமன், ராஜன், குமரன், பண்டாரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.