tamilnadu

img

தோழர் பி.நடராஜன் காலமானார்

திருநெல்வேலி, ஆக.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பி னர் தோழர் பி.நடராஜன் (61) திங்கட் கிழமை மாலை மாரடைப்பால் கால மானார்.      இதுகுறித்து சி.பி.எம் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது- தோட்டத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை துவங்கியவர் தோழர் பி.நடராஜன். தொழிற்சங்க இயக்கத்தின் மூலம் கட்சியில் இணைந்தார். சிவகிரி வட்டாரத்தில் தன் அரசியல் வாழ்க்கையை வாலி பர் இயக்கத்தின் மூலம் துவக்கி னார்.  கட்சியின் முழுநேர ஊழிய ரானார். கட்சியின் வட்டாரச் செய லாளராக பத்தாண்டுகள் பணி யாற்றினார். விவசாய சங்கத்திலும் பணியாற்றினார். தற்போது விவ சாய சங்க மாவட்டப் பொருளாளராக உள்ளார். சிவகிரி பேரூராட்சி மன்ற உறுப்பினராக ஒரு முறை தேர்வாகி திறம்பட செயலாற்றினார். நல்ல பேச்சாளர். சிறந்த அமைப்பாளர்.  தீக்கதிர் முகவர். சிவகிரி பகுதி உழைக்கும் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி மறைந்து விட்டார். மூன்று பெண் குழந்தைக ளையும் வளர்த்து ஆளாக்குவதில் அக்கறையோடு செயல்பட்டார். சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் அவரை பின் தொடர்ந்து வந்தது. உறுதிமிக்க ஒரு கம்யூனிஸ்ட் ஊழி யரை இயக்கம் இழந்து விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.