tamilnadu

மதச்சார்பற்ற நாடான இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சி நெல்லையில் நவாஸ்கனி பேட்டி

திருநெல்வேலி, டிச.29- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநி லச் செயலாளர் நிஜாமுதீன் குடும்ப விழா வுக்கு இராமநாதபுரம் எம்.பி. நவா ஸ்கனி நெல்லை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில், புதிய குடியுரி மைச் சட்டத்தை கொண்டு வந்ததால்,  இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியு ள்ளது. ஆகவே, குடியுரிமை திரு த்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறு தல், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), மக்கள்தொகை பதிவேடு (என்ஆர்பி) ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவ தும் மத்திய அரசுக்கு எதிராக போரா ட்டம் நடந்து வருகிறது.  2011-ல் மக்கள் தொகை கணக்கெ டுப்பின் போது 15 விவரங்கள் சேகரித்த னர். ஆனால், தற்போது கூடுதலாக 6 தக வல்கள் கூடுதலாக சேர்த்துள்ளனர். பெற்றோர் பிறந்த இடம் மற்றும் தேதி யை குறிப்பிட வேண்டும் என கூறப்ப ட்டுள்ளது. இது இந்திய நாட்டின் ஒவ்வொரு நாட்டு குடிமக்க ளுக்கான பிரச்சனை. இதனை நாங்கள்  எதிர்க்கிறோம். குடியுரிமைத் திருத்த சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகி ஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகளுக்கு, மத த்தின் அடிப்படையில், குடியுரிமை வழங்குவது ஏற்புடையதாக இல்லை. சமயச் சார்பற்ற நாடான இந்தியா வில் இது போன்று சட்டம் இயற்றப்ப டுவது ஜனநாயகத்துக்கு எதிரானது.  இது மறைமுகமாக இந்துத்துவா கொள்கையை நாட்டில் திணிப்ப தற்கான முன்னோடியாக உள்ளது. இதனை நாங்கள் சட்டரீதியாக எதி ர்கொள்ள உள்ளோம். குடியுரிமை திரு த்தச் சட்டத்தை திரும்பப் பெற க்கோரி உச்சநீதிமன்றத்தில் இதுவரை  60 மனுக்கள் தாக்கல் செய்யப்ப ட்டுள்ளன. முதலாவதாக நாங்கள்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.  இந்த பிரச்சனை எங்களுக்கான போ ராட்டம் அல்ல. அனைத்து சமுதாய மக்க ளுக்கான போராட்டம்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தமி ழக அரசு கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அதில் இலங்கைத் தமிழர்க ளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து ஏதும் இல்லை.் தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது.  இந்தியா தற்போது பொருளாதார சரிவை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. மக்களை ஒன்றுபடுத்தி பொரு ளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுக்காமல் மக்களை மத ரீதியில் பிரிக்கும் செயலில் மத்திய அரசு ஈடு பட்டுவருகிறது. மதச் சார்பற்ற நாடான இந்தி யாவை தற்போது மதவாத நாடாக மாற்ற  மத்திய அரசு முயற்சி செய்கிறது. அத ற்கு தமிழக அரசு துணை போகிறது. உள்ளாட்சித் தேர்தலில், தமிழக அர சுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டு வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

;