tamilnadu

img

தமிழக மக்களின் உணர்வுகளோடு விளையாடும் பாஜக- அதிமுக கட்சிகள்

தஞ்சாவூர், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்களான தஞ்சை நாடாளுமன்ற தொகுதி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவில் வியாழக்கிழமை மாலைபரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். மாநகரக்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார் வரவேற்றார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசுகையில், மக்களுக்கு மதம் உண்டு. மதநம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு.அரசுக்கு மதம் கிடையாது. இது தான்மதச்சார்பின்மை என்பதாகும். இந்தியாவில் மதவாதம் வளர்வதற்கான வாய்ப்பு, இந்திய அரசியல் சட்டத் தினை சீர்குலைப்பதற்கான வாய்ப்பு ஒரு எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. 


காங்கிரஸ்- திமுக, கம்யூனிஸ்டுகள் போல ஒரு அரசியல் கட்சியல்லபாரதிய ஜனதா என்பதை அனைவரும் உணர வேண்டும். அது ஆர்எஸ்எஸ்எனும் பாசிச இயக்கத்தின் கிளை அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் நாட்டில் 70-க்கும் மேற்பட்ட கிளைஅமைப்புகள் உள்ளன. ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியல் சட்டத்தை ஏற்காத, மனுதர்மத்தை ஏற்கக்கூடிய ஒரு அமைப்பு. இந்திய தேசியக் கொடியை ஏற்காத, காவிக்கொடி தான் தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென நினைக்கும் ஒரு அமைப்பு. வெளிநாடுகளில் ஒரு அமைப்பைஏற்படுத்தி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்எஸ்எஸ் இன்றைக்கு அரசின் நீதி, சட்டம், ராணுவம்என அனைத்து துறைகளிலும் நிறைந்துள்ளது. இது தேசத்திற்கு ஆபத்தாகமுடியும். 



தொழில்கள் பாதிப்பு


பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசுதொழில் பாதிக்கப்பட்டு ஐந்து லட்சம்பேர் வேலை இழந்தனர். திருப்பூரில் பனியன் தொழில் பாதிக்கப்பட்டது தொழில்கள் முடங்கின. கோவையில்பொறியியல் தொழில்கள், திருச்சியில் இயந்திர தளவாட உப தொழில்கள் அனைத்தும் பாதிப்படைந்தன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, இருக்கிற வேலைகளும் பறிபோயின. விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறியது. இன்று வேலை இல்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இதுவரை சந்திக்காத புதியசூழ்நிலையில் வாழ்கிறோம். விவசாயம் பாதிப்பால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. கல்வியும், சுகாதாரமும் இலவசமாக எந்த நாடுவழங்குகிறது, அந்த நாடு தான் முன் னேற முடியும். ஆசிரியர்களுக்கும் வேலை இல்லை. மாணவர்களும் வரவில்லை என்ற நிலை தான் உள்ளது. விவசாயிகள், வியாபாரிகளிடம் பணம் இல்லாத நிலை உள்ளது. தமிழக மக்களுக்கு துரோகம்நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர்.ஓராண்டு விதிவிலக்கு பெற்றுத் தருவோம் என்று மத்திய அமைச்சர்கள் சொன்னார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காக மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச்சொன்னார்கள். ஆனால் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கேட்டால் அப்படிஒரு தீர்மானமே எனக்கு வரவில்லைஎன்கிறார். உள்துறை அமைச்சரிடம் கேட்டால் சிரிக்கிறார். ஆறரை கோடிதமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடிய மத்திய, மாநில அரசுகள் தான் ஆட்சியில் இருக்கின்றன. இவர்களோடு மற்ற கட்சிகள் எப்படி கூட்டு சேருகின்றனர். இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? கல்வி கற்பதற்கான உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. நீட் தேர்வில் பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக, நீதிமன்றம் சென்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் பெற்றுத் தந்தோம். ஆனால் மாநில அரசு நீதிமன்றம் வரவே இல்லை, மத்திய அரசு மாணவர்களுக்கு எதிராக வாதாடுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் பொதுவான ஒரு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என சொல்லியுள்ளது. 


இன்றைக்கு மத்திய சிபிஐ அமைப்பில் கூட நியாயம் இல்லை. அதிகாரிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுகிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள்,அரசைக் குறை கூறி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அவலம் இந்தஆட்சியில் தான் உள்ளது. எனவேபொதுமக்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ் வாறு டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசினார். சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சிபிஐமாவட்டப் பொருளாளர் பாலசுப்ரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் ச.சொக்கா ரவி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, வெ.ஜீவக்குமார், எம்.மாலதி, மனிதநேய மக்கள் கட்சிமாநில பொதுச்செயலாளர் ஐ.எம்.பாதுஷா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.புண்ணியமூர்த்தி, என்.சரவணன், ஜி.அரவிந்த்சாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மதிமுக மாநகரச் செயலாளர்வி.தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டணிகட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.நமச்சிவாயம் நன்றி கூறினார். முன்னதாக உறந்தை போர்முரசு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.


;