அறந்தாங்கி, ஜூலை 5 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தலைகவசம் அணிவது தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு பேரணியை வெள்ளியன்று நடத்தினர். அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணிக்கு, அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகிலா தலைமை வகித்தார். வட்டாட்சியர் சுரேஷ்பிரபு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள், காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து பெரிய கடைவீதி சாலை, புதுக்கோட்டை சாலை, அருகன்குளம்சாலை, பட்டுக்கோட்டை சாலை, களப்பக்காடு மெயின் ரோடு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அண்ணா சிலை அருகே பேரணியை நிறைவு செய்தனர்.