தரங்கம்பாடி, நவ.17- நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் வேளாண்மை கண்காட்சி மற்றும் நீர் மேலாண்மை கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் திறந்து வைத்து பர்வை யிட்டு உரையாற்றினார். மத்திய நீர் ஆணையத்தின் துணை இயக்குநர் கிரிதர் உரையாற்றினார். வேளாண்மை, மீன் வளம், தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், கால் நடைத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ஏராளமான அரங்குகள் இடம்பெற்றன. 300க்கும் மேற்பட்ட விவசாயி கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.