tamilnadu

img

இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வாக்காளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, ஏப்.2-


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம்காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக் கரசரை ஆதரித்து செவ்வாய் அன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அவர் பேசியதாவது:தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையை பஞ்சம், பட்டினியாக உள்ள எத்தியோபியாவை போல ஆக்க வேண்டிய உங்கள் நோக்கம் என்ன? விவசாயிகள் எல்லாம் நிலத்தை விற்பார்கள். அந்த நிலங் களை பெரும் முதலாளிகள் வாங்கி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற இயற்கை எரிவாயுக்களை எடுப்பார்கள். இதன்மூலம் கோடிக் கணக்கான ரூபாய் கிடைக்கும். ஆனால் நாங்கள் அழிந்து போவோம். இதனைத் தடுக்க திராணியற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசுஇருக்க என்ன காரணம்? குட்காஊழல், பருப்பு ஊழல், கல்வித்துறையில் ஊழல் போன்றவை மிரட்டுகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்கஆட்சியாளர்கள் லஞ்சம் கேட்டதால்இங்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. தமிழகத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் பெண்களுக்குப் பாதுகாப் பில்லை. டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ரகசியஅனுமதி இப்படி பல துரோகங்களை மோடி தமிழகத்திற்குச் செய்துள்ளார். ஜிஎஸ்டி வரியால்வணிகர்களின் வாழ்வு சிதைந்துவிட்டது. கல்வி மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாத மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கிறார். இதுகுறித்து கேட்டால் நான் காவலன் என்கிறார்.கஜா புயலில் சிக்கி 83 பேர்இறந்தபோது இரங்கல் செய்தி கூட தெரிவிக்காத மோடி தமிழர்களிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டுகேட்கிறார்? காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். இது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும்.மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட் டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் பன்முகத் தன்மை சிதைந்து போய் விடும்.



இந்த நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு பன்முகத் தன்மை பாதுகாக்கப்படாவிட்டால் எதிர்பாராத விபரீதம் நடக்கும்.அந்த நிலை வரவிடாமல் தடுக்க வாக்காளர்கள் தான் முடிவெடுக்க வேண் டும்.திருச்சி நாடாளுமன்றத் தொகுதிமதச்சார்பின்மையின் கோட்டையாகத் திகழ்கின்ற மலைக்கோட்டையை உள்ளடக்கிய தொகுதி. இந்த தொகுதியில் போட்டியில் காங்கிரஸ் கட்சிவேட்பாளர் திருநாவுக்கரசருக்கு கை சின்னத்தில் வாக்களித்துலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்யவேண்டும் என்றார். கூட்டத்தில் வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசுகையில், நான் 6 முறை சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர், துணைச் சபாநாயகர், மத்திய - மாநில அமைச்சர் என பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். தற்போது திருச்சி வாக்காளபெருமக்களை நம்பி வந்து இருக்கின்றேன். உங்களுக்காகப்பாடுபடுவேன் என உறுதியளிக்கின்றேன். எனவே இந்த தொகுதியில் வெற்றியைத் தேடித் தாருங்கள் என்றார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல் வன், சம்பத், ரெங்கராஜன், கே.சி.பாண்டியன், ஜெயபால், மாவட் டக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் ராமர், திமுகமுன்னாள் அமைச்சர் நேரு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜவகர், மதிமுக மாநகர பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;