tamilnadu

திருச்சி மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

தமுஎகச சார்பில் மாணவர்களுக்கு பேச்சு , கவிதைப் போட்டி

திருச்சிராப்பள்ளி, நவ.21- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் கல்லூரி மாண வர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கான பேச்சுப் போட்டி, கவிதை வாசிப்பு போட்டி வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி சமய புரம் டோல்கேட் அருகில் உள்ள கூத்தூர் விக்னேஷ் பள்ளி அருகில் உள்ள அவ் வையார் அரங்கில் நடை பெற உள்ளது. பேச்சு, கவிதை போட்டிகளில் தலா 3 பரிசு வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.  போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாண வர்கள், இளைஞர்கள் 98424- 01401, 94438- 38401 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட் டத் தலைவர் கவிஞர் நந்த லாலா, செயலாளர் ரங்க ராஜன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

சாலைப் பள்ளத்தில் தேங்கும் மழைநீர்: மக்கள் அவதி

சீர்காழி, நவ.19- கொள்ளிடம் அருகே குத்தவக்கரையிலிருந்து பாரத் நகரில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் சாலையின் குறுக்கே தேங்கிய மழை நீரால் மக்கள் அவதியடைந் துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குத்தவக்கரை கிராமத்திலி ருந்து ரேஷன் கடைக்கு வரும் சாலையில் பள்ளம் உள்ள தால் கடந்த சில தினங்களாக அவ்வப்பொழுது பெய்து வரும் மழையின் காரண மாக தண்ணீர் தேங்கியுள் ளது. தண்ணீர் வடிந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் மழை நீர் தேங்கியுள்ளது.  இதனால் குத்தவக்கரை கிராமத்திலிருந்து வரும் மக்கள் ஏரியைப் போல் தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி சிரமத்துடன் வந்து செல்கின்றனர். 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் இந்த சாலையின் வழியே குத்தவக்கரை கிரா மத்திலிருந்து ரேஷன் கடை க்கு வந்து செல்கின்றனர். தொடர்ந்து இரண்டு அடி ஆழத்திற்கு தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுவ தற்கு காரணமாக உள்ளது. எனவே சாலையின் நடுவே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, நவ.21-  திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் நவ.22 அன்று தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 10, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ள லாம். விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப் படத்துடன் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சி என்ற முக வரியில் நேரில் ஆஜராகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது என ஆட்சியர் சிவராசு தெரிவித் துள்ளார்.