tamilnadu

img

துளிர் வினாடி- வினாப் போட்டிகளில் வென்ற திருவாரூர் பள்ளிகள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர், ஜந்தர் மந்தர்  வினாடி வினா போட்டிகள் திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தொடக்க விழாவில் ஒன்றிய தலைவர் நூலகர் ம.ஆசைத்தம்பி தலைமை வகித்தார். பள்ளியின் மேலாளர் சின்னராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக செயலாளர் முகைய்தீன் இப்னு அரபி வரவேற்றார். தமிழ் வழியில் 6,7,8 வகுப்பு பிரிவில் பண்ணைவிளாகம் புனித ஜெயராக்கினி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜா.ஆண்டனி ஜெயந்தன், தெ. ஐயப்பன், கு.கோபால சக்திவேல் முதலிடமும், கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.சக்தி, ஏ.அஜய், எஸ்.ஜே.ஜெயக்குமார் இரண்டாமிடமும், எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த எம்.ஹரிகா சுதன், ஏ.நவீன், எல்.சாய்ராம் மூன்றாமிடமும், 9, 10-ம்  வகுப்புகளில் சித்தன்வாழூர் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ரா.துர்கா, ர.தேவிஸ்ரீ முத லிடமும், ஜான்புவோடை வடகாடு பொ.அரவிந்த் மதுதேஷ் கிருஷ்ணன், ந.எழில்வேந்தன் இரண்டாமிடமும், திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ். நறு முகை, எஸ்.சந்தியா மூன்றாமிடமும் பெற்றனர்.

11, 12 வகுப்புகள்

11, 12 வகுப்புகளில் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெ.தௌமி காராணி, கே.சுஜி முதலிடமும், ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி எஸ். நிறைமதி, பி.புனிதவதி இரண்டாமிடமும், கொடராச்சேரி அரசு ஆண்கள் மேல் நிலைப்  பள்ளியைச் சேர்ந்த ஆர்.கே.பிரதாப், ஜெ அஸ்வின் மூன்றாமிடமும் பெற்றார்கள்.  ஆங்கில வழியில் 6,7,8 வகுப்பு பிரிவில் திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.ஜெய் ஹரி சினி, டி.தியாகேஷ்ராஜா, எஸ்.பி.யாசினி முதலிடமும், கொடராச்சேரி யுனெட்டெடு மெட்ரிக் பள்ளிச் சேர்ந்த எம்.சுவேதா, ஜி.அனிதா,  பி.தரிகாஸ்ரீ இரண்டாமிடமும், முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த பி.வித்யா ராணி, ஆர்.நிவிதா, எஸ்-அனுப்பிரியா மூன்றாமிடமும், 9, 10-ஆம் வகுப்பு பிரிவுகளில் திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த எஸ்.ராஜராம், எஸ்.ஸ்ரீநிதி முதலிடமும், கூத்தாநல்லூர் மன்பஉல் உலா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வி.கீர்த்திவாசன், எஸ்.ஏ.சையது அகமது இரண்டாமிடமும், முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த எம்.விசாலாட்சி, டி.அகல்யா மூன்றாடமும், 11, 12-ஆம் வகுப்புகளில் திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.ஹரீஸ் தியாகராஜன், டி.உதயா முதலிடமும், திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.தருண், எஸ்.தன்வர்அகமது இரண்டா மிடமும், ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ.எம்.சுபாஷிணி, கே.பவானி மீனா மூன்றாமிடமும் பெற்றார்கள். 

பரிசளிப்பு

பரிசளிப்பு விழாவிற்கு மாவட்டத் தலைவர் தை.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலன், அசோகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி  அறிக்கை வாசித்தார். ஓ.என்.ஜி.சி துணை பொது மேலாளர் எஸ்.பி. ராஜசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் கே.ஆர்.முருகானந்தம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்க ளை வழங்கினார். பேராசிரியர்கள் எஸ்.ராம்பிரகாஷ், ரிஷி, டாக்டர் எஸ்.வீ.விஜயன் பாபு வாழ்த்தி பேசினர். நிறைவாக மாவட்ட பொருளாளர் வா.சுரேஷ் நன்றி கூறினார்.