திருவாரூர் மாவட்டத்தில் 70 காய்ச்சல் முகாம்கள்: அமைச்சர் தகவல்
திருவாரூர், ஆக.21- திருவாரூர் மாவட்டத்தில் தினமும் 70 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றது. இதன் மூலம் கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று எளிதாக கண்டறியப் பட்டு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படு கிறது என்று தமிழக உணவுத்துறை அமைச் சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களை சந்தித்த அவர் மேலும் கூறி யதாவது, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2551 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 15 பேர் வெண்டி லேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வரு கின்றனர். திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 28 ஆம் தேதி ஆய்வுக் கூட்டத்திற்கு தமி ழக முதல்வர் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
குறுவை சாகுபடி
தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லா மல் சாகுபடி பணிகள் நடைபெற்று வரு கிறது. குறுவை சாகுபடி மூலமாக 3 லட் சத்து 87 ஆயிரம் ஹெக்டரில் நெல் விளைவிக்கப்பட்டுள்ளது. விவசாயி களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விவ சாயிகள் மகிழ்ச்சியாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். மின் தடை ஏற்படுவது குறித்து செய்தி யாளர்கள் கேட்டதற்கு இதுவொரு பிரச்ச னையே இல்லை. அதிமுக ஆட்சியில் தற்போது மின்சாரமும் போதுமான அள விற்கு கையிருப்பு உள்ளதால் மின்வெட்டு என்ற பேச்சிற்கே இடமில்லை. கடந்த காலங்களில் தமிழகம் எப்படி இருளில் மூழ்கியிருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று கூறினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர் த. ஆனந்த், கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ஆர்.தினகரன், திரு வாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல் வர் முத்துகுமரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஜயகுமார், கோட்டாட்சி யர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நன்னிலம் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு
திருவாரூர், ஆக.21- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று காரணமாக ஏழு இடங்கள் தனி மைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூ ராட்சிப் பகுதியில் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இவர்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 22 பேர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்க ளாக, நன்னிலம் பகுதிகளில் கொரோனா தொற்று கூடுதலாக கண்டறியப்பட்டது. இதன் காரணமாக நன்னிலம் பேரூராட் சிக்குட்பட்ட மணவாளன்பேட்டை, ஆற் றங்கரைத்தெரு, சர்க்கரைக் குளத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு, லயன் கரைத்தெரு மற்றும் காவலர் குடி யிருப்பு உள்ளிட்ட ஏழு பகுதிகள் தனி மைப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஸ்டேட் வங்கி கிளை மேலாளருக்கு தொற்று உறுதியானதால் வங்கி செயல் பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சுகாதார மேற் பார்வையாளர் ஜோதி தலைமையில் நடைபெற்று வருகிறது.