tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, டிச.15- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வருகிற ஜனவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சனிக்கிழமை திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் சுரேஷ், தலைமை வகித்தார். வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், ஏஐடியுசி மாவட்ட செய லாளர் மணி, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் துரைராஜ், பெல் சங்க பாலமுருகன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.