tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தம் சர்வதேச ஒப்பந்தத்திற்கு எதிரானது நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு

திருச்சிராப்பள்ளி, ஜன.20- திருச்சியில் வானம் சார்பில் அரச மைப்பு சட்டம் எதிர்கொள்ளும் சவால் கள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்க றிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் பானுமதி தலைமை வகித்தார்.  சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: அரசமைப்பு சட்டம் இன்று யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களிடம் போய் சேர்ந்து விட்டது. குடியுரிமை திருத்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடுபவர்கள் அரசமைப்பு சட்டத் தின் முகப்பு பகுதியை கையில் வைத்துக் கொண்டு தான் இந்த சட்டம் எனது உரிமை என்று முழங்குகிறார்கள். எனவே இனி சவாலை எதிர்கொள்ள வேண்டியது மோடியும், அமித்ஷாவும் தான். குடியுரிமை திருத்த சட்டம் அர சிதழில் வெளியிடப்பட்டு நடைமுறை க்கு வந்துவிட்டது. இதன் நோக்கம் பற்றி மத்திய உள்துறை மந்திரி விளக்க செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. எதிர்ப்பவர்களை எல்லாம் மிரட்டி, விரட்டி விட்டு சர்வாதி கார போக்கில் இதனை நிறைவேற்றியே தீருவேன் என மத்திய அரசு கூறுகிறது.  மக்கள் இந்த சட்டத்தைப் பற்றி புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் தான் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. இந்த சட்டத்தி ற்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை உச்சநீதிமன்றம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என தெரியவில்லை. கேரள சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இனி இவர்களை குட்ட வேண்டியது உச்சநீதிமன்றம் தான். இந்தச் சட்டம் வேண்டாம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறி வரு கின்றன. ஆனால் ஹிட்லர் போல் சர்வாதி கார ஆட்சி நடத்துவதற்கு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஒப்பந்தத்திற்கு எதிரான வகையில் இச்சட்டம் உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம் என கூறி விட்டார்கள். காந்தியடிகள் போல் ஒத்துழை யாமை இயக்கம் நடத்தவும் மக்கள் தயா ராகி விட்டார்கள். மக்கள் வரிப்பணத்தை இந்த ஆவணத்தை தயாரிப்பதற்காக வீணாக்கப் போகிறார்கள். அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நீதிமன் றங்கள் கண்டும் காணாதது போல் இருக்க கூடாது. அரசமைப்பு சட்டத்தை கையில் வைத்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் இன்று அதனை பாதுகாக்க மறுக்கிறார்கள். அரசமைப்பு சட்டம் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்க முடியும். இந்த கட்டுமானத்தை நீடிக்க விடமாட்டோம்.  இவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசினார். கருத்தரங்கில் தென்னிந்திய திருச்சபை திருச்சி, தஞ்சை மண்டல பிஷப் சந்திரசேகரன், முகமது அமீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்ன தாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நந்தலாலா வரவேற்றார். இளையபெருமாள் நன்றி கூறினார்.

;