tamilnadu

ரத்ததான முகாம்

திருச்சிராப்பள்ளி, மே 25- கொரோனா ஊரடங்கால் திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைக்கு ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை போக்கிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழ கத்தின் சார்பில் ஞாயிறு அன்று அந்தநல்லூர் ஒன்றியம், திருப்ப ராய்த்துறை, விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை வாலிபர் சங்க ஒன்றிய செயலா ளர் அஜித்குமார் ரத்தம் கொடுத்து தொடக்கி வைத்தார். ஆசிரியர் கல்யாணசுந்தம் தனது குடும்பத்துடன் ரத்ததானம் செய்தார்.  முகாமில் ஊராட்சி தலைவர் பிரகாசமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், வி.ச. மாவட்ட தலைவர் கே.சி. பாண்டியன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் வினோத்மணி, த.மு.எ.க.ச மாவட்ட செயலாளர் ரங்கராசன், எல்ஐசி பழனியாண்டி, சிஐடியு மணிகண்டன், சுப்ரமணி, கரும்பாச்சலம், காவிரி மீட்பு குழு, பள்ளியின் ஆசிரியர்கள், தி.துறை ஊராட்சி திமுக ஐடிவிங் நரேஷ்குமார், இயற்கை விவசாயி ஒண்டி முத்து மற்றும் காவல்துறை நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு துணை மருத்துவ அலுவலர் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.