tamilnadu

தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி முக்கிய செய்திகள்

பேராவூரணி ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்  

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தலைவர் பதவிகளை கைப்பற்ற  94 பேர் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களின் விபரம், ஊராட்சி வாரியாக வருமாறு: அலிவலம்- ஆசைத்தம்பி, ( போட்டியின்றி தேர்வு) அம்மையாண்டி- வை. முத்துராமலிங்கம். இடையாத்தி –செ.அன்புக்கரசி, காலகம் - ரா.செந்தில்குமார், களத்தூர்- தி.மாரிமுத்து, கல்லுரணிக்காடு– வே. சுந்தரராஜன், குறிச்சி –க. வைரக்கண்ணு, மடத்திக்காடு – சு. சுதாசினி, மாவடுகுறிச்சி –ப. அமிர்தம், ஒட்டங்காடு –ரெ. ராசாக்கண்ணு, பைங்கால் - சு. அமுதா, பழையநகரம்-அ.சுரேகா, பாலத்தளி – சு.விஜயா, பெரியநாயகி புரம் -மு. வத்சலா, பின்னவாசல்- ந.கண்மணி, பூவாளூர் -ரா.முருகேசன், புனல்வாசல் - ரா.சிவசம்பாள், செங்கமங்கலம்- ரா.செல்வம், செருவாவிடுதி வடக்கு –த. விஜயராமன்,  செருவாவிடுதி தெற்கு –த. ராமஜெயம்,சொர்ணக்காடு –ரா. விஜயபாஸ்கரன்,தென்னங்குடி – ச.குணதா,திருச்சிற்றம்பலம் - மு. மோகன், துறவிக்காடு- ஆர். கற்புக்கரசி, வலப்பிரமன் காடு –சி. கணேசன், வாட்டாத்திக் கோட்டை- ப.  பரமேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ள னர். 

ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 

பேராவூரணி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆகும். இந்த உறுப்பினர் பதவி இடங்களை கைப்பற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் , சுயேச்சை வேட்பாளர்கள் என 67 பேர் தேர்தல் களத்தில் நின்றனர். வார்டு எண் வாரியாக வெற்றி பெற்றவர்களின் விபரம்:  வார்டு எண் : 1. க. ரேவதி (சுயே), வார்டு எண்: 2. கோ.அமிர்தவள்ளி (அதிமுக), வார்டு எண் : 3.  ஆ. நவனீதம்(திமுக), வார்டு எண்: 4. ஆல்பர்ட் குணாநிதி (திமுக), வார்டு எண்: 5. உ.அண்ணாத்துரை (திமுக), வார்டு எண் : 6. ர.சசிகலா (அதிமுக), வார்டு எண்: 7. போ. மாலா (அதிமுக), வார்டு எண்: 8. ஜெ. ராஜப்பிரியா (திமுக) , வார்டு எண்:9. அ. பெரிய நாயகி (பி.ஜே.பி,), வார்டு எண்: 10. மு. பாக்கியம் முத்துவேல் (அதிமுக), வார்டு எண்: 11. ஆர். ராஜலெட்சுமி (அதிமுக), வார்டு எண்:12. அ.மதிவாணன் (திமுக), வார்டு எண்: 13 உ. துரை மாணிக்கம் (அதிமுக), வார்டு எண்: 14 ம.சங்கவி (திமுக), வார்டு எண் :15 ரா.சுந்தர் (அதிமுக) வெற்றி பெற்றுள்ளனர்.
 

கடலோர கிராமங்களில் செயல்படாத சுனாமி எச்சரிக்கை கருவிகள்

சீர்காழி, ஜன.3- சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் பழுதடைந்துள்ள சுனாமி எச்சரிக்கை கருவி களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழை யாறு சுனாமி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி திருமுல்லைவாசல் நடுநிலை ப்பள்ளி மற்றும் கூழையாறு ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளிக் கட்டிடங்களில் கடந்த 2005  ஆம் ஆண்டு   கடலோர கிராமங்களில் சுனாமி  எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டன. மீன்பிடித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த மூன்று கருவிகளும் துவ ங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் இயங்கி வந்தன. பின்னர் கடந்த 10 ஆண்டுக ளாக இந்தக் கருவிகள் இயங்கவில்லை. கூழை யாறு கிராமத்தில் பொருத்தப்பட்ட சுனாமி எச்சரிக்கை கருவி சில நேரங்களில் மட்டுமே இயங்குகிறது.  கடலில் ஏற்படும் இயற்கை சீற்றம், புயல் மற்றும் சுனாமி ஏற்படும் பொழு தெல்லாம், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு  மையத்திலிருந்து மேற்கண்ட மூன்று இடங்க ளுக்கு தானாகவே தகவல் கிடைத்தவுடன் இங்குள்ள கட்டுப்பாட்டு இயந்திரங்களுக்கு சிக்னல் கிடைத்தவுடன், ஒலிப் பெருக்கி மூலம்  அபாயச் சங்கு போன்ற எச்சரிக்கை ஒலி வெளி யேறும் போது, அப்பகுதியில் உள்ளவர்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாகச்  செல்ல முடியும். அப்படி முன்கூட்டியே எச்சரி க்கை செய்யும் கருவி கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக பழுதடைந்துள்ளது.  எனவே கடலோர கிராம மக்கள் மற்றும் மீன வர்கள் நலன் கருதி உடனடியாக சுனாமி எச்சரி க்கை கருவிகளை செயல்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கடலோர கிராம  மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

திருச்சியில் இன்று பொருட்காட்சி துவக்கம்  

திருச்சிராப்பள்ளி, ஜன.3- திருச்சியில் பொழு துபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொரு ட்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சனிக்கிழமை அன்று தொடங்கி வைக்கிறார்.  தமிழ்நாடு அரசின் சார்பில்  பொழுதுபோக்கு அம்சங்களு டன் கூடிய அரசுப் பொருட்கா ட்சி நடைபெற உள்ளது. இப்பொருட்காட்சி திருச்சி பட்டாபிராமன் சாலை அரு கில் உள்ள  பொருட்காட்சி மை தானத்தில் 4-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப்பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10  மணி வரை நடைபெற உள்ளது.

மன்னார்குடியில் இன்று மின்தடை  

மன்னார்குடி, ஜன.3- மன்னார்குடி துணை மின் நிலையத்தில் ஜன.4-ம் தேதி அன்று மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவல்பூண்டி, கோரையாறு, கர்ணாவூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என சா.சம்பத், உதவி செயற்பொறியாளர் மன்னார்குடி தெரிவித்துள்ளார். 

பஞ்சராகி நின்ற லாரியில் இருந்த மூங்கில் லோடு குத்தி இருவர் பலி

தஞ்சாவூர், ஜன.3-  தஞ்சாவூர் அடுத்த பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி ஒன்று பஞ்சராகி, சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த மூங்கில் கம்புகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.  இதில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து, மீன்லோடு ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று தஞ்சை நோக்கி அதிகாலை 3 மணிக்கு பள்ளியக்ரஹாரம் வந்த போது, முன்னால் பஞ்சாராகி நின்ற லாரியில், எச்சரிக்கையை குறிக்கும் எவ்வித குறியீடுகளும் இல்லாததால், மீன் லாரி ஓட்டுநர், கவனிக்காமல் அந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி விட்டார். விபத்தில், லாரியில் நீட்டிக்கொண்டிருந்த மூங்கில்கள், தரங்கம்பாடியை சேர்ந்த மீன் லாரியின் டிரைவர் விஜய் (30), உதவியாளர் பிலிப் (28) ஆகியோரின் மார்பு, வயிற்றில் குத்தி கிழித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து தஞ்சை தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

202 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஜன.3- திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவில் பேரில் கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட கரு மண்டபம், தென்னூர், புத்தூர், தில்லைநகர், உறை யூர் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும்  கடைகளில்  ஆய்வு மேற்கொ ள்ளப்பபட்டு, அரசால் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொ ருட்களை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த  11 கடைகளில் இருந்து 202 கிலோ பிளாஸ்டிக் பொரு ட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டு ரூ. 56,700 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆய்வில் உதவிஆணை யர் வினோத் தலைமையில்,  சுகாதார அலுவலர் இள ங்கோவன், சுகாதாரஆய்வா ளர் பன்னீர்செல்வம் மற்றும்  சுகாதார மேற்பார்வையா ளர்கள், மாநகராட்சி பணியா ளர்கள் ஈடுபட்டனர்.

;