tamilnadu

img

தினந்தோறும் 5000 பேருக்கு கொரோனா சோதனை செய்க... திருச்சி ஆட்சியருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிமாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டஆட்சியர் சிவராசுவிற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில்தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் செய்வதறியாது துன்புற்றுவருகிறார்கள். இந்நிலையில் கீழ்கண்ட நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அமலாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும். குறைந்தது நாள் ஒன்றிற்கு5000 பேருக்கு சோதனை எடுக்க வேண்டும். மாநகரத்தின் அனைத்து 18 மாநகராட்சி சுகாதார மையங்களிலும், தாலுகா தலைமை மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரமையங்கள், ரயில்வே, பிஎச்இஎல், ஓஎப்டி, எச்ஏபிபி, இஎஸ்ஐ மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும்.தாலுகா அளவில் மையங்களை உருவாக்கி கொரோனா நோயாளிகளுக்கு உயர்தரமருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, வெண்டிலேட்டர், கழிப்பறை, போதியமருந்து வசதி, பிற நோய்களை பார்ப்பதற் கான மருத்துவர்கள், அவசர சிகிச்சைக்கான ஏற்பாட்டை உறுதி படுத்திட வேண்டும். அரசுதலைமை மருத்துவமனையில் நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். பரிசோதனை கூடங்களை மேலும் அதிகரிக்கவேண்டும். அங்கு நடைபெறும் செயல்களைகண்காணிக்க வேண்டும். நெருக்கமான வீடுகள் அபார்ட்மெண்ட்களில் மருத்துவ குழுக் களை ஏற்படுத்தி காய்ச்சல் முகாம்களை நடத்திகொரானா நோயாளிகளை கண்டறிய வேண்டும்.

நடமாடும் மருத்துவ வாகனம் 10 எண் ணிக்கையில் தயார் செய்து வார்டு வாரியாக பரிசோதனை செய்ய வேண்டும். சித்தா, ஹோமியோமருந்தகங்கள் முழுவீச்சில் செயல்படுத்திட வேண்டும். பரிசோதனை முடிவை 5 நாட்கள்
வரை தாமதப்படுத்துவது அது வரை நோய்இருப்பவர்கள் குடும்பதிலும் அருகாமையிலும் நோயை பரப்பி வருவது என்பது எந்தவகையிலும் பொருத்தமற்ற நடவடிக்கையாகும். எனவே சோதனை எடுத்து 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.சோதனை எடுக்கப்பட்டவர்களை சந்தேக நபர்களை முடிவு வரும் வரை தனிமை முகாம்ஏற்பாடு செய்து தனிமைபடுத்திட வேண்டும்.முன்களப் பணியில் அனைத்து மருத்துவமனை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள், மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு, பெரும் வியாபார நிறுவனஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பரிசோதனைமுகாம் நடத்திட வேண்டும். 

மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் என்பதுகற்றியுள்ள 10 மாவட்டத்திற்கு இங்கிருந்தே காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் மையப்பகுதி ஆகும். இங்கு லாரிகளில் வருகின்ற காய்கறி,மளிகை உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு ஆக்ரா, பெல்லாரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250 க்கும் மேற்பட்ட லாரிகள் எந்தவித நோய் பரிசோதனையும் இல்லாமல் வந்து போகிறது. எனவே மாவட்ட எல்லையில் அவசியம் பரிசோதனை தேவைப்படுகிறது. லாரி ஓட்டுநர், உதவியாளர்களை உரிய முறையில் பரிசோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும். நோய்தொற்று பரவி வரும் நிலையில் தனியார் மருத்துமனைகளில் காப்பீடு திட்டத்தில்கொரோனா நோய்க்கு சிகிச்சை மறுப்பது,நடுத்தர ஏழை மக்களுக்கு பிற நோய்களுக்குகூட மருத்துவம் மறுப்பது வரைமுறை இல்லாமல் கட்டணங்களை லட்சக்கணக்கில் வசூல்செய்வதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. 

குறிப்பாக திருச்சி மாநகரில் உள்ள 2 பெரியதனியார் மருத்துவமனைகளில் கோடீஸ்வரர் களை மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கும் போக்கு உள்ளது. நியாயமான அரசு அறிவித்த கட்டணத்திற்கு 50 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டுகிறோம். மேலும் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சோதனை எத்தனை, என்பதை தினமும் ஆட்சியர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.மேலும் ஊரடங்கு அமல்படுத்துகிற போதுஅதனால் ஏற்படும் வேலையின்மை, வறுமை, பட்டினி சாவு ஏற்படும் நிலையை கருத்தில் கொண்டு மாதம் ரூ 7500 குடும்பத்திற்கு வழங்க அரசுக்கு பரிந்துரைத்திட வேண்டும்.ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நடைமுறையால் சனிக்கிழமை பெரும் கூட்டம் கடை வீதிகளில், கறி, மீன் கடைகளில் கூடுவதால் அரசின் நோக்கம் நிறைவேறுவதில்லை. 

மேலும் திருச்சி வியாபாரிகளை மதியம் 2 மணிக்கு கடையை அடைக்க சொல்வதன் மூலம் வியாபார நேரம் குறைவதால் கூட்டம் முண்டியடிப்பதால் நோய் அதிகரிக்கவே செய்யும் இதில் எந்த பயனும் இல்லை. எனவே தேவை என்றால் 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்திட வேண்டும். அதனால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும். என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

;