tamilnadu

img

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜன.6-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பி.சின்னசாமி, மாவட்ட துணைத் தலை வர் எஸ்.விநாயகம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.முகமது அலி விளக்கிப் பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில், குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5  ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கோமாரி நோயால் உயிரிழந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், மாடுக ளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.  ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கலையரசி, விசிக விவசாய அணி மாநிலச் செயலா ளர் வீர.செங்கோலன், விவசாய தொழிற் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஆரோக்கிய சாமி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் ப.காமராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.