tamilnadu

img

பதவியேற்பு விழா

அறந்தாங்கி, ஜூலை 1-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி சங்க 37வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடை பெற்றது. சங்க புதிய தலைவராக செலக்சன் பள்ளி முதல்வர் க.சுரேஷ்குமார், செயலாளராக வெ.வீரையா, பொருளா ளராக சி.பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் மருத்துவர் அ.ஜமீர்பாஷா பதவிபிரமாணம் செய்து வைத்து 6 பெண்களுக்கு தையல் மிஷின் எல்என்புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இருக்கைகள் உள்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கவிஞர் தங்கம் முர்த்தி, வருங்கால ஆளுநராக தேர்வு பெற்ற ஆர்,ஜெயக்கண் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றி னர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த் துணை ஆளுநர் கராத்தே கன்னையன் ரோட்டரி கிளப் மக ளிர் பிரிவு சேர்மன் அல்லிராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைவர் அபுதாலிப் தலைமையில் நடை பெற்ற விழாவில் செயலாளர் பார்த்திபன் ஆண்டறிக்கை வைத்தார். முன்னதாக புதிய தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். நிறைவாக வீரையா நன்றி கூறினார்.