tamilnadu

img

அரசுப் பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கோ.இரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.ரவீந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) இரா.வேம்பையன், கிராமக் கல்வி குழு தலைவர் சி.மயில்வாகனன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி து.லதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பா.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை பெ.தேன்மொழி வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் ச.இளையராஜா ஆண்டறிக்கை வாசித்தார். இலக்கிய மன்றப் போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றியக் கவுன்சிலர் ராஜலெட்சுமி ராஜ்குமார், ஊராட்சி தலைவர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். சின்னத்திரை புகழ் பட்டிமன்ற பேச்சாளர் கோவி.தாமரைச்செல்வன் சொற்பொழிவு ஆற்றினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசியர் கூட்டணி மாநில துணை தலைவர் க.கணேசன், காலகம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமநாதன், ஆசிரியர்கள் செ.இராகவன்துரை, கு.நாகராஜன், இரா.சத்தியமூர்த்தி, மா.சங்கிலிபூதத்துரை, த.முருகையன் வாழ்த்திப் பேசினர். க.இமாகுலேட் மேரிகிரிஜா, சி.சரண்யா, க.குளோரி ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இடைநிலை ஆசிரியை மா.பவுனம்மாள் நன்றி கூறினார். 

;