tamilnadu

img

சிறப்பு குறைதீர் முகாம்

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. சீர்காழி தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ ஜான்சன் வரவேற்றார். சீர்காழி நிலவள வங்கித் தலைவர் நற்குணன், வட்டார மருத்துவ அலுவலர் பபிதா, முன்னிலை வகித்தனர்.  சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, முதியோர் உதவித்தொகை, இலவச மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டு அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார். முகாமில் 1000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.  இதே போல் எடமணல், திருக்கருகாவூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்ற முகாம்களிலும் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் திருச்செல்வம், வி.ஏ.ஓக்கள் மாரியம்மாள், குபேந்திரன், அருள்பெருமாள் மற்றும் ஊராட்சி செயலா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.