திருச்சிராப்பள்ளி, பிப்.3- தஞ்சாவூர் பாரத் அறிவி யல் நிர்வாகவியல் கல்லூரி யில் காட்சித் தொடர்பியல் துறையும், சென்னை நிழல் பதியமும் இணைந்து குறும் படம் மற்றும் ஆவணப்படம் தயாரித்தல் பயிற்சிப் பட்ட றையை நடத்தின. அதன் நிறைவு விழாவில் திரைப்பட இயக்குநர்கள் மு.களஞ் சியம், சசி ஆகியோ சிறப்பு ரையாற்றினர். பாரத் கல்லூரி முதல்வர் க.குமார் வரவேற்று பேசினார். பாரத் கல்லூரி இயக்குநர் த.வீராசாமி வாழ்த்துரையாற்றினார். பாரத் கல்விக் குழுமங்க ளின் செயலாளர் புனிதா கணேசன் தலைமை தாங்கி உரையாற்றினார். சென்னை நிழல் பதியத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு பேசினார். திரைப்பட நடிகர் கலை சேகர் உரையாற்றினார். முன்னதாக மாணவர்கள் தயாரித்த குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் திரை யிடப்பட்டன. இதில் பெண்மை என்ற குறும்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்டு கேடயமும், சான்றித ழும் வழங்கப்பட்டது. நிறைவாக காட்சித் தொ டர்பியல் துறைத் தலைவர் கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பா. அமுதசித்ரா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற் பாடுகளை காட்சித் தொடர்பி யல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்தி ருந்தனர்.