tamilnadu

img

மார்ச்.17-ல் புதுக்கோட்டையில் இருப்புப் போராட்டம்

தேசிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி


புதுக்கோட்டை, மார்ச்.13- தேசிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் வருகின்ற 17-ஆம் 24 மணி நேர இருப்புப் போராட்டம் புதுக் கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புக்கூட்டம் காங்கிரஸ் கட்சி யின் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் பாபு தலைமையில் புதுக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.அசோகன் கூறியது: கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தமுமுக, மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, ஏஐஎம் ஐஎம், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் பிரதி நிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது.  மேலும், மக்கள் ஒற்றுமை மேடை யின் மாநில அமைப்பின் முடிவின்படி 17.03.2020 காலை 10 மணி முதல் 18.03.2020 காலை 10 மணிவரை மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் 24 மணி நேர தொடர் இருப்புப் போராட்டத்தை புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி, கறம்பக்குடி, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், மணமேல்குடி ஆகிய மையங்களில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசி யல் கட்சிகள், ஜனநாயக அமைப்பு கள் மற்றும் முக்கியப் பிரமுகர்க ளையும் சந்தித்து ஆதரவு கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.