tamilnadu

சேதமான சாலைகளை செப்பனிடக் கோரிக்கை

அறந்தாங்கி, ஜூன் 27- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகர நுகர் வோர் சங்க கூட்டம் நடைபெற்றது. தலைவர் கே.சிவக்குமார் டி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ரெங்க சாமி வரவேற்றார். செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். கூட்டத்தில், எம்ஜிஆர் சிலையிலி ருந்து பெரிய கடைவீதி வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்து முழுமையான ஒரு வழிப்பாதையை மக்கள் பின் பற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் 90 சதவீத சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளதை செப்ப னிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. நிறைவாக வெங்கடரமணி நன்றி கூறினார்.