tamilnadu

img

திருவாரூர் ஒன்றியத்தில் பூண்டி.கே.கலைவாணன் வாக்கு சேகரிப்பு

திருவாரூர், ஏப்.5-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன் திருவாரூர் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.புலிவலத்தில் தொடங்கி விஷ்ணுதோப்பு, கழனி வாசல், காரியாங்குடு, கூடூர்,ஊத்தங்குடி, மாங்குடி, புதுப்பத்தூர், தப்பளாம்புலியூர், அலிவலம், சேமங்கலம், ஆண்டிபாளையம், திருவாதிரை மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். திமுக நிர்வாகிகள் முன்னாள் எம்.பி.ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ அசோகன்,ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா,சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி.பவுன்ராஜ், எஸ்.சேகர், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, நகர செயலாளர் எம்.எ.மாரியப்பன், மதிமுகமாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆரூர்.சீனிவாசன், விசிக மாவட்ட செயலாளர் மா.வடிவழகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். சென்ற இடங்கள் எல்லாம் மக்கள் சிறப்புவரவேற்பு அளித்தனர்.

;