tamilnadu

img

ஓராண்டாக ஊதியம் தராத தனியார் சிமெண்ட் ஆலை

பெரம்பலூர், ஜூன் 17- தனியார் சிமெண்ட் ஆலை நிர்வா கம் கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரி க்கை மனு அளித்தனர். பெரம்பலூர் ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் குன் னம் வட்டம் கீழமாத்தூரில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் ஆலை ஊழி யர்கள் அளித்த மனுவில், கீழமாத்தூ ரில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் ஆலையில் கடந்த 11 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகிறோம்.  இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு சிமெண்ட் ஆலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. அடிப்படை வசதிகளும் செய்து தர வில்லை. இதுகுறித்து ஆலை நிர்வா கத்திடம் பலமுறை முறையிட்டும் பிரச்ச னையை சரி செய்ய முயற்சிக்க வில்லை. தொழிலாளர் நலத்துறை அலு வலர்களிடம் புகார் அளித்தும் பல னில்லை. எனவே, ஊழியர்களாகிய நாங்களும், எங்களது குடும்பத்தினரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரு கிறோம்.  ஏழைத் தொழிலாளர்களின் நலன் கருதி ஆட்சியர், எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை விரைந்து வழங்கவும், அடிப்படை வசதி கள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.