தஞ்சாவூர், ஜூன் 12- திருச்சிற்றம்பலத்தில் காவலரைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற 3 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். அவர்களை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தி வேதவள்ளி வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணை யில், பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடி வடக்கு கிரா மத்தைச் சேர்ந்த வீரகோபால்(35), பழனிவேல்(59), சாமி யப்பன் (24) என்பதும், ஒரு துக்க நிகழ்ச்சியின் இறுதி காரி யங்கள் செய்து விட்டு, வந்தவர்கள் ஓட்டலில் சாப்பிட வந்த இடத்தில் குடிபோதையில் தகராறு செய்தாகவும் கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் பட்டுக்கோட்டை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முத்துமுருகன் முன்பு ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.