tamilnadu

img

கனிம வளங்களை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30- திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்புலியபுரம் ஒன்றியத்தில் தளுகை ஊராட்சியில் கனிம வளங்களை சமூக விரோதிகள்  கொள்ளையடிக்க ஒத்து போகாத மாற்றுத்திறனாளி  பெண்ணின் வீட்டை சட்ட விரேதமாக இடித்த தளுகை கிராம நிர்வாக அலு வலர் மீதும், அதற்கு துணை போகும் துறையூர் வட்டாட்சியர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத மாக இடிக்கப்பட்ட வீட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  இந்த முறைகேடுகளுக்கு உயர்  மட்ட விசாரணை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வியாழ னன்று உப்பிலியபுரம், எரகுடி, கொப்பம் பட்டி ஆகிய 3  இடங்களில் வருவாய் வரி ஆய்வாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

உப்பிலியபுரம் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியகுழு உறுப்பி னர் டீ.வி.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அ.பழநிசாமி சிறப்புரையாற்றினார். செல்வம், விஸ்வநாதன், நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எரகுடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியகுழு உறுப்பினர் ஏ.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி.முத்துக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பால சுப்ரமணியன், ஜி.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர். கொப்பம்பட்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் சு.முத்துக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மங்கள்ராஜ், கிளைச் செயலாளர்கள் ராஜசேகர், சாக்ரடீஸ், புகழேந்தி, ஜாபர், கோவிந்த ராஜ், சுரேந்திரா, செல்லமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;