tamilnadu

img

மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

 திருச்சிராப்பள்ளி, செப்.29- மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மாநில உரிமைகளை காப்போம், கூட்டாட்சி நடைமுறையினை தொடர்வோம். ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம், காஷ்மீர் மக்களை பாதுகாப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் ஞாயிறு அன்று அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு வள்ளி, சித்ரா தலைமை வகித்தனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ரபீக் சிறப்புரையாற்றினார். இதில் விஜய், முனவர்ஷா, சையது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.  இதே போல் மணப்பாறை வட்டக்குழு சார்பில் மணப்பாறை பள்ளிவாசல் முன் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வட்ட செயலாளர் ஷாஜகான், வட்ட துணை செயலாளர் அக்பர்அலி, வட்டத் தலைவர் ஆவா.இளையராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு கலந்து கொண்டனர்.