tamilnadu

img

மக்கள் தொடர்பு முகாம்

பொன்னமராவதி: புதுக்கோட்டை பொன்னமராவதி தாலுகா மறவாமதுரையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இலுப்பூர் கோட்டாட்சியர் டெசிக்குமார் தலைமை வகித்தார். திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவை கோரிய 25 பயனாளிகளுக்கு ரூ.3,31,500 மதிப்புள்ள உதவித் தொகை வழங்கப்பட்டது.  மேலும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை அடங்கிய 190 மனுக்கள் பெறப்பட்டன. பொன்னமராவதி தனி வட்டாட்சியர் சங்கரகாமேஸ்வரன், துணை வட்டாட்சியர் ராஜா, காரையூர் வருவாய் ஆய்வாளர் இளஞ்சியம், கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.