tamilnadu

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

 திருச்சிராப்பள்ளி,ஜூலை 25- குப்பையில்லா நகரம், புவி வெப்பமடைதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவிய ப்போட்டி நடத்தப்படவுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள  அனைத்து பள்ளிகளுக்கும் இதுகுறித்து அறிவிப்பு வழங்க ப்பட்டுள்ளது.  இப்போட்டியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை மழை நீர் சேகரிப்பு, 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு குப்பை யில்லா நகரம், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புவி வெப்பமடைதல் ஆகிய தலைப்புகள் மாணவ, மாணவி களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஓவியங்களை ஒவ்வொரு பள்ளியிலும் 10 நபர்களை தேர்வுசெய்து 5.8.2019ம் தேதிக்குள் தி இந்து நாளிதழ் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.  ஓவியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாண வியர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இறுதி போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு பிரிவினருக்கும் முதல் பரிசு ரூ.3,000, 2ம் பரிசு ரூ.2,000 மற்றும் 3ம் பரிசு ரூ.1000- மேலும் 7 ஆறுதல் பரிசு ரூ.500 ஆக மொத்தம் 30 பரிசு மாநகராட்சியால் வழங்கப்பட உள்ளது  என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.