tamilnadu

நாகர்கோவில் முக்கிய செய்திகள்

கடல் அலையில் சிக்கியவர் சடலமாக மீட்பு

நாகர்கோவில், ஜூன்.15- குமரி மாவட்டம்,  கோவில்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (26). பொறியாளர். இவர், கரூர் மாவட்டம், கன்னிவாடி பகுதியில் காற்றாலைக்கு உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, இரண்டு தினங்களுக்கு முன் சொந்த ஊரில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு, இவருடன் பணிபுரியும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தாமரை கண்ணன் (23) உட்பட 12 பேர் கோவில்புரத்துக்கு வந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர், 12 ஆம் தேதி மாலை ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரையில் தாமரை கண்ணன் உள்பட சிலர் குளிக்க சென்றனர். அங்கு அனைவரும் கடலில் இறங்கி குளித்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தாமரை கண்ணன் மாயமானார். கடந்த இரு நாள்களாக, குளச்சல் கடலோர காவல் படையினர் கடலில் மாயமான தாமரை கண்ணனை தேடினர். இந்நிலையில், 3 ஆவது நாளாக சனியன்று காலை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது பள்ளம் அன்னை நகர் அருகே தாமரை கண்ணன் உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த குளச்சல் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

வீடு புகுந்து கொள்ளை பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில், ஜூன் 15- நாகர்கோயில் பராசக்தி கார்டனில் வசித்து வருபவர் அனேஷ் கவி. இவரது வீட்டு மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் சிதம்பரதாணு. வெள்ளியன்று இரவு இப்பகுதிக்கு வந்த கொள்ளையர்கள் இரு வீட்டிலும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிதம்பரதாணு வீட்டு பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை, ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

;