tamilnadu

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.924.35 கோடியில் 40 திட்டப்பணிகள்

சென்னை, ஜூன் 26-  சென்னை மாநகராட்சி யில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.947.35 கோடி மதிப்பீட்டில் 40 திட்டப்பணி கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது வருமாறு:- ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ்  சென்னை மாநகராட்சியில் 40 திட்டப்பணிகள் ரூ.947.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.25.73 கோடி மதிப்பீட்டில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக  மக்கள் புகார்கள் தெரிவிப்பதை எளிதாக்கும் வகையில் ‘நம்ம சென்னை” என்ற கைபேசி செயலி உரு வாக்கப்பட்டு நடைமுறை யில் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 28 பள்ளிகளில் மின்னணு வளவகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  8 பூங்காக்கள் மறு வடிவமைக்கப்பட்டு ள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி களுக்கான உணர்வு பூங்கா, போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சமிக்கை விளக்கு பூங்கா, கோபதி நாராயணா சாலையில் உள்ள மேம்பாலத் தூண்களை சுற்றி தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து  ரூ.491.86 கோடி மதிப்பீட்டில் 22 திட்டங்கள் செயலாக்க த்தில் உள்ளது. தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் பலஅடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி, வில்லி வாக்கம் ஏரியை புணர மைக்கும் பணி,  தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி,  பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடங்களில் சூரிய மின் உற்பத்தி அமைப்பு நிறுவும் பணி, வாகன நிறுத்தம் மேலாண்மை பணி, மிதி வண்டி பகிர்மானப்பணி ஆகியவை  முக்கிய திட்டங்களாகும்.   இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;