tamilnadu

img

குடவாசல் ஒன்றியத்தில் எம்.செல்வராசு வாக்குச் சேகரிப்பு

குடவாசல், ஏப்.8-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர் என்.கலைமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், குடவாசல்வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் தீவிரபிரச்சாரம் நடைபெற்றது.நாகை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசு, பொதுமக்களை சந்தித்து வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். வேட்பாளருடன் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் பயணக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை குடவாசல் வடக்கு பகுதி கூத்தனூரில் எழுச்சியுடன் பிரச்சாரத்தை துவங்கினர். தொடர்ந்து மருதவாஞ்சேரி, நெம்மேலி, அதாம்பாவூர், திருவிழிமிழலை, வடுககுடி, எரவாஞ்சேரி, கருவேலி, கூந்தலூர், கடலங்குடி அதனைத் தொடர்ந்து குடவாசல் தெற்குப் பகுதிகண்டரமாணிக்கம், சித்தாடி, செருகளத்தூர், பருத்தியூர், திருவிடச்சேரி, பெரும்பண்ணையூர்,சிமிழி, புதுக்குடி,சேங்காலிபுரம், அன்னவாசல் மனப் பறவை, காங்கேய நகரம் என 40-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் பிரச்சாரம் நடைபெற்றது. குடவாசல் பள்ளிவாசல் கடைவீதி வழியாக சென்று வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே வேட்பாளர் எம்.செல்வராசு அங்கே திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேசினார்.


கொடூர பாசிச முகம் கொண்ட மோடி அரசாங்கம் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கடன்களை தள்ளுபடி செய்தும் விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயத்தை அழிக்கும் வகையில் திட்டங் களை கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி அவர் களை தற்கொலைக்கு தள்ளிய பிஜேபியின் மோடி அரசையும், மோடியின் கைப்பாவையாக உள்ள அண்ணா திமுக கூட்டணியை டெபாசிட் இழக்க செய்ய ஆட்சியை அகற்றவேண்டும் என்றார்.இந்தப் பகுதி மக்களின் அனைத்துகோரிக்கைகளையும் பரிசீலனை செய்துவிவசாயத்தை தவிர வேறு மாற்று தொழில்கள் இல்லாத இந்த தொகுதிக்கு தேவையான சிறு குறு உற்பத்தி தொழில் கூடங்களை அமைக்க பாடுபடுவேன் என உறுதியளித்தார். பிரச்சாரம் சென்ற அனைத்து பகுதிகளிலும் வாக்காளப் பெருமக்கள விவசாய, விவசாய தொழிலாளர்கள் என்றுஅனைவரும் ஒன்று திரண்டு இடதுசாரி வேட்பாளருக்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக பெண்கள் திரளாக வந்து வேட்பாளரை வரவேற்று வெற்றி திலகமிட்டுனர். பிரச்சாரசுற்றுப் பயணத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா,செயலாளர்கள் கே.அன்பழகன் (வடக்கு) ஆர்.லட்சுமி(தெற்கு) திமுகஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஜோதிராமன்(வடக்கு) பா.பிரபாகரன் (தெற்கு) சிபிஐ ஒன்றிய செயலாளர். ஏ.சுப்பிரவேலு மற்றும் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;