tamilnadu

கும்பகோணம் மற்றும் அரியலூர் முக்கிய செய்திகள்

பராமரிப்புப் பணிக்காக  பாபநாசம் ரயில்வே கேட் மூடல்

கும்பகோணம், பிப்.21- தஞ்சை மாவட்டம் பாப நாசம்- சாலியமங்கலம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் தண்டவாள பரா மரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 23-ல் காலை 7 முதல் மாலை 6 மணி வரை கேட் தற்காலிகமாக மூடப் படும். எனவே திருக்கருகா வூர் மற்றும் சாலியமங்களம் வழியே செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொது மக்கள் அன்று மட்டும் மேற் படி சாலையை தவிர்க்கும் படி தென்னக ரயில்வே தெரி வித்துள்ளது. மேலும் கும்பகோணம் பகுதியிலிருந்து வருவோர்க ளுக்கு மாற்றுப் பாதை தாரா சுரம், பட்டிஸ்வரம், கோவிந்த குடி, ஆவூர் திருக்கருக்கவூர் வழியாக சாலியமங்கலம் சாலை வழியாக செல்லலாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

உலகத் தாய் மொழி தின கருத்தரங்கு  

மன்னார்குடி, பிப்.21- ஜேசிஎஸ் மன்னார்குடி பவர் மற்றும் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியன சார்பில் மன்னார் குடியில் உள்ள எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளியில் உலக தாய் மொழி தின கருத்தரங்கம் நடைபெற்றது. ஜேசிஎஸ் பவர் தலைவர் சு.சங்கர் குமார் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.ஏ. பள்ளி நிர்வாகிகள் அனிதா ரமேஷ், தாளாளர் பி.ரமேஷ் மற்றும் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

காசநோய் விழிப்புணர்வு பேரணி

அரியலூர்: தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் ஜெயங்கொண்டம் பரப்ரமம் பவுண்டேசன் இணைந்து நடத்திய உலக காசநோய் வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவர் ரவிசங்கர் துவக்கி வைத்தார். பரப்ரமம் பவுண்டேசன் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட நல கல்வியாளர் மனோகரன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வேல்முரு கன், முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வை யாளர் சீனிவாசன், தலைமை செவிலியர் ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரணி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் தொடங்கி கும்பகோணம் சாலை, நான்கு ரோடு வழியாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் நிறைவு பெற்றது. காச நோய் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேவியோலை இமாகுலேட் வரவேற்றார். அன்னை தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் உமாராணி நன்றி கூறினார்.மேலும் காசநோய் மற்றும் எச்ஐவியால் பாதிக் கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொண்டைக் கடலை, பேரிச்சம்பழம் வழங்கப்பட்டது.